ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்
ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்கும் பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர் அனுமன்.
🐒 அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர்.
🐒 சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🐒 சமஸ்கிருதத்தில் 'ஹனு" என்பதற்கும் 'தாடையும்", 'மன்" என்பதற்கு 'பெரிதானதது" என்பதால், 'ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.
🐒 இன்னொரு வழக்கில் 'ஹன்" என்பதற்கு 'கொன்றவன்", 'மானம்" எனபதற்கு 'தற்பெருமை" என்பதால், 'ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.
🐒 ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பது தான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.
🐒 ஆஞ்சநேயருக்கு சொல்லின் செல்வன், ராம தூதுவன் என்று பல பெயர்கள் உண்டு. இவர் காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பு+தங்களையும் வென்றவர். இவரை வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :
🌀 சு+ரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
🌀 தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.
🌀 நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக