Translate

புதன், அக்டோபர் 26, 2016

படித்ததில் ரசித்தது...

😎😎😎😎😎😎😎
நான் இன்று படித்ததில் ரசித்தது...
பழையது தான்
இருந்தாலும்....

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 200 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 200 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்....

தெரியுமா உங்களுக்கு

தெரியுமா உங்களுக்கு...!
உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு)  இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.                       

*♻பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻*

படித்து வருந்தியது

படித்து வருந்தியது!!!

🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணும்மோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,

🌴திருமணத்தில் நான் விழைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயிம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு விவசாயி.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்🌳

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!!உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 3000 வருடங்கள் பழமை வாய்ந்த சிதம்பரம், ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் மற்றும் 5000 வருடம் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்ட நவ திருப்பதி கோவில்கள். செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.
படிக்கவே
நமக்குப் பெருமையாக
உள்ளது.

ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்

ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்

ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்கும் பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர் அனுமன்.

🐒 அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர்.

🐒 சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🐒 சமஸ்கிருதத்தில் 'ஹனு" என்பதற்கும் 'தாடையும்", 'மன்" என்பதற்கு 'பெரிதானதது" என்பதால், 'ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.

🐒 இன்னொரு வழக்கில் 'ஹன்" என்பதற்கு 'கொன்றவன்", 'மானம்" எனபதற்கு 'தற்பெருமை" என்பதால், 'ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.

🐒 ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பது தான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.

🐒 ஆஞ்சநேயருக்கு சொல்லின் செல்வன், ராம தூதுவன் என்று பல பெயர்கள் உண்டு. இவர் காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பு+தங்களையும் வென்றவர். இவரை வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :

🌀 சு+ரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

🌀 தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.

🌀 நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

செவ்வாய், செப்டம்பர் 30, 2014

இது யார் சொத்து விபரம் தெரியுமா?

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......

வியாழன், செப்டம்பர் 18, 2014

ஜோக்கு மச்சி ஜோக்கு .

ஜோக்கு மச்சி ஜோக்கு ... (ஹா... ஹா... ஹா... )

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .

இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது

"Tea" / "Cofee"    எது  சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல    2 "ஈ " இருக்கும்.  நோ நோ நோ... நோ